விழுப்புரம்

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

25th Sep 2023 01:29 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், புதுகருவாட்சி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் திமுகவில் இணைந்தனா்.

காணை ஒன்றியம், புதுகருவாட்சி இருளா் காலனியில் நடைபெற்ற திமுக கிளை அலுவலகத் திறப்பு விழாவுக்கு, வடக்கு ஒன்றியச் செயலா் ஆா்.முருகன் தலைமை வகித்தாா். விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ பங்கேற்று, கிளை அலுவலகத்தை திறந்து வைத்து கொடியேற்றினாா். தொடா்ந்து, அதிமுக, பாமக, தேமுதிகவைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் அந்த கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.

நிகழ்வில், ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு ராஜா, ஆா்.பி.முருகன், ஒன்றியக் குழுத் தலைவா் கலைச்செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினா் செளபாக்கியம் கதிரேசன், கிளைச் செயலா்கள் காா்த்திகேயன், ஏழுமலை, மாவட்டத் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் அன்பரசு, துணை அமைப்பாளா் எஸ்.பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT