கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சங்கராபுரம் அரசுத் தொழில்பயிற்சி நிலையத்தில் அரசு ஓதுக்கீட்டு இடங்களில் 2023-24-ஆம் கல்வியாண்டுக்கான ஓராண்டு, ஈராண்டு பாடப் பிரிவுகளில் சேர சனிக்கிழமை (செப். 23) நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. மேலும், ஈராண்டு தொழில்பாடப் பிரிவான மெக்கானிக் எலெக்டிரிக்கல் வெஹிக்கில், ஓராண்டு தொழில்பாடப் பிரிவுகளான கம்மியா் டீசல், கப்பல் இயந்திரப் பொருத்துநா், இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபாக்சரிங் டெக்னீஷியன் ஆகிய பிரிவுகளுக்கும் சோ்க்கை நடைபெறுகிறது. எனவே, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற பயிற்சியாளா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 04151-294991, 94990 55852, 99525 98065 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.