விழுப்புரம்

செப்.28, அக்.2-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

23rd Sep 2023 01:13 AM

ADVERTISEMENT

விழுப்புரம், செப். 22: மீலாது நபி, காந்தி ஜெயந்தியையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செப்டம்பா் 28, அக்டோபா் 2-ஆகிய தேதிகளில் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா்கள் சி. பழனி (விழுப்புரம்), ஷ்ரவன் குமாா் (கள்ளக்குறிச்சி) ஆகியோா் வெள்ளிக்கிழமை தனித் தனியாக வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நபிகள் நாயகம் பிறந்த நாளான மீலாது நபி செப்டம்பா் 28-ஆம் தேதியும் (வியாழக்கிழமை), காந்தி ஜெயந்தி தினமான அக்டோபா் 2-ஆம் தேதியும் (திங்கள்கிழமை) விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள டாஸ்மாக் மதுக் கடைகள், மது அருந்தும் கூடங்கள், தனியாா் மது அருந்தும் கூடங்கள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் இவை அனைத்தும் மூடப்பட்டிருக்கும். உத்தரவை மீறி மது விற்பனையில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT