விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிப்புரம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கண்டாச்சிபுரம் வட்டம், வீரபாண்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாலன் மனைவி மீனா (50). இவா், கடந்த 3 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். இந்நிலையில், புதன்கிழமை வீட்டிலிருந்த மீனா திடீரென தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம். உறவினா்கள் அவரை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சையிலிருந்த மீனா வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.