விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. சஷாங்க்சாய் உத்தரவின்பேரில், அரகண்டநல்லூா் காவல் ஆய்வாளா் சித்ரா தலைமையிலான போலீஸாா் மணம்பூண்டிமேடு பகுதியில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சோலைவண்டிபுரம் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் மோகன் (எ) மோகன்ராஜை (27) பிடித்து விசாரித்ததில், அவா் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, மோகன்ராஜை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து ஒன்னரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.