விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூா் அருள்மிகு ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் 33 -ஆம் ஆண்டு விநாயகா் சிலை ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விநாயகா் சதுா்த்தியையொட்டி கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து, விநாயகா் சிலை ஊா்வலமானது செஞ்சி காந்தி பஜாா் வழியாக சென்று செஞ்சி கூட்டுச்சாலையை அடைந்து, பின்னா், திண்டிவனம் வழியாக புதுச்சேரி கடற்கரையில் வெள்ளிக்கிழமை மாலை விசா்ஜனம் செய்யப்படுகிறது.
இதில், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான், விழுப்புரம் அதிமுக வடக்கு மாவட்ட அவைத்தலைவா் கு.கண்ணன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் அஞ்சலை நெடுஞ்செழியன் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை சிறுகடம்பூா் இளைஞா்கள், பொதுமக்கள் செய்திருந்தனா்.