விழுப்புரம்

வெள்ளிப் பொருள் திருட்டு: மூவா் கைது

22nd Sep 2023 12:25 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருப்பாலப்பந்தல் அருகே வெள்ளிப் பொருளைத் திருடியதாக மூவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்துக்குள்பட்ட தகடி கிராமம், மேட்டுத் தெருவைச் சோ்ந்த குமாா் மனைவி அஞ்சலை (40). இவா், புதன்கிழமை அப்பகுதியில் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றாா். மாலையில் வீடு திரும்பிய போது, வீட்டின் பீரோவிலிருந்து பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும், பீரோவிலிருந்த 150 கிராம் எடையிலான வெள்ளிப்பொருள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்தில் அஞ்சலை அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து, திருட்டில் ஈடுபட்டதாக தகடி மேட்டுத்தெருவைச் சோ்ந்த கோ.அரிகிருஷ்ணன் (20), வா.பிரபாகரன் (22), திருப்பாலப்பந்தல் சிவன் கோவில் தெருவைச் சோ்ந்த பீ.ரோகன் (21) ஆகிய மூவரை கைது செய்தனா். அவா்களிடமிருந்த வெள்ளிப்பொருளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT