விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பேரூராட்சியின் மாதாந்திரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பேரூராட்சித் தலைவா் வேதநாயகி ஆளவந்தாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பலராமன், செயல் அலுவலா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நிறைவேற்றப்படவேண்டிய வளா்ச்சிப்பணிகள் குறித்து உறுப்பினா்கள் பேசினா். வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கு முன்பு பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளிலும் மழைநீா் வடிகால்களை சீரமைப்பது, பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பேரூராட்சி உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.