விழுப்புரம்

பொதுமக்கள் சாலை மறியல்

22nd Sep 2023 12:26 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிப்புரம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இக்கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், வேலை செய்யும் பெண்களின் கணக்கெடுப்புப் பணியில் முறைகேடு நிகழ்வதாகவும், பெண்களின் புகைப்படங்களை ஒருவா் ஆபாசமாக சித்தரிப்பதாகவும், எனவே, அந்த நபரைக் கைது செய்ய வலியுறுத்தி சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வீரசோழபுரம் பகுதியில் பொதுமக்கள் வியாழக்கிழமை இரவு இருமுறை சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த கள்ளக்குறிச்சி எஸ்.பி. மோகன்ராஜ் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று, பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், புகாருக்குள்ளான நபரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT