விழுப்புரம்: சோழம்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய பொறியாளா் தினம், ஆசிரியா் தினம், உலக சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தினம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட கட்டுமானப் பொறியாளா் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் பிரபாகரன் தலைமை வகித்து, சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியா்கள், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். தொடா்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தவா் மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினாா்.
விழாவில், சங்கத்தின் துணைத் தலைவா் முருகன், பொருளாளா் முத்துராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.