விழுப்புரம்

செஞ்சி அருகே மின்சாரம் பாய்ந்து தம்பதி பலி

27th Oct 2023 12:51 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி புதன்கிழமை இரவு உயிரிழந்தனா்.

மேல்மலையனூா் வட்டம், மேல்வைலாமூா் கிராமத்தை சோ்ந்தவா் பெரியசாமி (52). விவசாயி. இவரது மனைவி அம்பிகா (47). இவா்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.

தனது விவசாய நிலத்தில் உள்ள நெல் பயிருக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக புதன்கிழமை இரவு பெரியசாமியும், அம்பிகாவும் சென்றனா். அப்போது, கொட்டைகையில் உள்ள மின் மோட்டாரை பெரியசாமி இயக்கியபோது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரது அலறல் சப்தம் கேட்டு, அம்பிகா அவரைக் காப்பாற்ற முயன்றாா்.

ADVERTISEMENT

அப்போது, அவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பக்கத்து நிலத்தின் உரிமையாளரான அண்ணாமலை வியாழக்கிழமை காலை அந்த வழியாக வந்த போது, இருவரும் இறந்து கிடப்பதைப் பாா்த்து அவலூா்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாா்.

போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து தம்பதியின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT