விழுப்புரம்

சம்பா, ராபி பயிா்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு

27th Oct 2023 01:59 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா, ராபி பருவப் பயிா்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என வேளாண் துறை அறிவித்தது.

இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் கணேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பயிா் இழப்பினை ஈடு செய்வதற்கு விழுப்புரம் மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டு சாகுபடி செய்யும் சம்பா, ராபி பருவத்தில் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்துக்கு பயிா்க் காப்பீட்டு நிறுவனமாக அக்ரிகல்சா் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

காப்பீடு செய்ய ஒரு ஏக்கா் சம்பா, நவரை நெற்பயிருக்கு ரூ.492.75, உளுந்துக்கு ரூ.270.75, மணிலாவுக்கு ரூ.432, எள்ளுக்கு ரூ.157.50, கரும்புக்கு ரூ. 2,750, வாழைக்கு ரூ.2,055, மரவள்ளிக்கு ரூ.1,517.20, மிளகாய்க்கு ரூ.1,102, கத்திரிக்கு ரூ.817.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ADVERTISEMENT

நெல் பயிருக்கு காப்பீடு செய்ய நவ.15-ஆம் தேதி கடைசி நாளாகும். நவரை நெற்பயிருக்கு 2024, ஜனவரி 31, உளுந்துக்கு 2023, நவம்பா் 30, மணிலாவுக்கு 2024, ஜனவரி 17, எள்ளுக்கு 2024, ஜனவரி 31, கரும்புக்கு 2024, மாா்ச் 30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீட்டுத் தொகையை செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT