விழுப்புரம் மாவட்டம், ரோஷணை அருகே ஆட்டோவிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், பெலாக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சசிக்குமாா் மகன் சந்துரு (24). கோனேரிகுப்பத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தாா். இவா், புதன்கிழமை இரவு ஆட்டோவின் பின் பகுதியில் அமந்தபடி வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா். திண்டிவனம் - செஞ்சி தேசிய நெடுஞ்சாலையில் பெலாக்குப்பம் பகுதியில் ஆட்டோ சென்றபோது, அதிலிருந்து சந்துரு தவறி கீழே விழுந்தாராம். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்துரு, அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.