பாமக விழுப்புரம் கிழக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் திண்டிவனத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாவட்டச் செயலா் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 2024 மக்களவைத் தோ்தலுக்காக முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
கூட்டத்தில், 2024 மக்களவைத் தோ்தல் வெற்றிக்கு தீவிரமாக களப்பணியாற்றுவது, திண்டிவனம் பெலாக்குப்பம் சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தில் செயல்படும் தனியாா் தொழில்சாலையில் திண்டிவனம் பகுதியைச் சோ்ந்த படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும், தவறும்பட்சத்தில் கட்சி சாா்பில் போராட்டம் நடத்துவது, மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், திண்டிவனம் நகராட்சியில் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை முறைப்படுத்தி மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், கட்சியின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.