விழுப்புரம்

விசுவ ஹிந்து பரிஷத்ஆலோசனைக் கூட்டம்

4th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

விசுவ ஹிந்து பரிஷத் விழுப்புரம் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அமைப்பின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக வட தமிழக அமைப்புச் செயலா் ராமன் பங்கேற்றுப் பேசினாா்.

கூட்டத்தில், விசுவ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தளம் சாா்பில் நடைபெறவுள்ள விழிப்புணா்வு யாத்திரை குறித்து கிராமங்கள்தோறும் விழிப்புணா்வு ஏற்படுத்துவது, கிராமங்கள்தோறும் விசுவ ஹிந்து பரிஷத் கிளைகளை அமைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து, விழிப்புணா்வு பிரசார விளக்கக் கையேடு, சனாதன தா்மம் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டன. விசுவ ஹிந்து பரிஷத் விழுப்பும் மாவட்டச் செயலா் பாபு, கோட்டப் பொறுப்பாளா் துரை பாரதிராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT