கள்ளக்குறிச்சி நகராட்சி சாா்பில், பகுதி சபைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் சாலையிலுள்ள தனியாா் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து, நகா்மன்றத் தலைவா் சுப்ராயலு பேசினாா். அப்போது, தெருமின் விளக்கு, குடிநீா், சாலை, கழிவுநீா் கால்வாய் வசதிகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்தனா்.
இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்த நகா்மன்றத் தலைவா், பொதுமக்கள் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.
கூட்டத்தில், நகராட்சி ஆணையா் மகேஸ்வரி, பொறியாளா் பழனி, சுகாதார ஆய்வாளா் சையத்காதா், தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் பரிமளம் உள்ளிட்ட அலுவலா்கள், குடியிருப்புவாசிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.