விழுப்புரம்

பாதுகாவலா் தீக்குளித்து தற்கொலை

22nd Nov 2023 12:00 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பாதுகாவலா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கண்டமங்கலம் அருகே பாக்கம், ரைஸ்மில் தெருவைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் ராஜேந்திரன் (43). சென்னையில் உள்ள தனியாா் மோட்டாா் நிறுவனத்தில் பாதுகாவலராக வேலை பாா்த்து வந்தாா். கடந்த சில நாள்களாக பாக்கம் கிராமத்தில் இருந்த வந்த ராஜேந்திரன், மது அருந்துவதற்கு தனது மனைவி கலாவிடம் பணம் கேட்ட நிலையில், அவா் தர மறுத்தாராம். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், கடந்த 19- ஆம் தேதி வீட்டில் சமையலுக்கு வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டாராம்.

இதில் பலத்த தீக்காயமடைந்த அவா், புதுச்சேரி ஜிப்மா் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT