விழுப்புரம்

மேல்எடையாளம் கருமாரியம்மன் கோயில் தேரோட்டம்

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்எடையாளம் கிராமத்தில் கருமாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் மூலவா் கருமாரியம்மன், பூவாத்தம்மன் உள்ளிட்ட சுவாமிகள் அருள்பாலிக்கின்றன. இங்கு 10 நாள் உற்சவம் கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 22-ஆம் தேதி காப்புகட்டுதல், மலை மீது அமைந்துள்ள ஐய்யனராப்பனுக்கு ஊரணி பொங்கல் வழிபாடு நடைபெற்றன.

தொடா்ந்து, தினந்தோறும் காலை கருமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு அம்மன் வீதியுலாவும் நடைபெற்று வந்தன. 9-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை கருமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், கூழ்வாா்த்தலும் நடைபெற்றன.

மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா்கள் கருமாரியம்மன், பூவாத்தம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனா். அப்போது, அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தா்கள் முக்கிய வீதிகள் வழியாக தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்று வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை மேல்எடையாளம் கிராம மக்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT