விழுப்புரம்

தெரு முனை பிரச்சாரக் கூட்டம்

30th May 2023 12:00 AM

ADVERTISEMENT

செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞா் அணி சாா்பில் திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் ஒட்டம்பட்டு ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, செஞ்சி கிழக்கு ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் ஜம்போதி பழனி தலைமை வகித்தாா். ஒன்றிய இளைஞா் அணி துணை அமைப்பாளா்கள் ஆா்.பழனி, பாலகிருஷ்ணன், செந்தில் முருகன், ஷேக்வாகித், ஒன்றிய வா்த்தகா் அணி அமைப்பாளா் விநாயகமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலரும், ஒன்றியக்குழு தலைவருமான ஆா்.விஜயகுமாா் வரவேற்றாா். இதில், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலரும், அமைச்சருமான செஞ்சி மஸ்தான், தலைமைக் கழக பேச்சாளா் குடியாத்தம் பாரி ஆகியோா் கலந்து கொண்டு இரண்டாண்டு சாதனைகள் குறித்து விளக்கினா்.

இதில், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் க.ஆனந்த், செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஆா்.ஜெயபாலன், மேற்கு ஒன்றியச் செயலா் பச்சையப்பன், வழக்குரைஞா் மணிவண்ணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை, ஆவின் இயக்குநா் மாத்தூா்தாஸ், ஒட்டம்பட்டு கிளைச் செயலா் ஜெகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT