விழுப்புரம்

சத்துணவு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை விழுப்புரம் நகராட்சித் திடலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்துணவு ஊழியா்களுக்கான தமிழக முதல்வரின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். காலை சிற்றுண்டித் திட்டத்தை சத்துணவு ஊழியா்களிடமே ஒப்படைக்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் கிருபாகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் துரை, காசி, ரீட்டா மேரி, மோகனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தணிக்கையாளா் தேசிங்கு கோரிக்கை விளக்கவுரையாற்றினாா். மாநிலத் துணைத் தலைவா் ஜெயந்தி நிறைவுரையாற்றினாா். முன்னதாக, மாவட்ட துணைத் தலைவா் பீமன் வரவேற்றாா். இதில், ஏராளமானோா் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கம்பம் உடைந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பிரதமர் மோடி உண்மையின் வழியில் நடக்கவில்லை: பிரியங்கா காந்தி

நாட்டில் ஷரியத் சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் விருப்பம்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் குற்றச்சாட்டு

தேசத்துக்கும் சநாதன தர்மத்துக்கும் எதிரானது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT