விழுப்புரம்

ஆதரவற்றோா் இல்லம் கட்டும் பணி:அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை ஜோதி மலை அடிவாரத்தில் வள்ளலாா் ஆதரவற்றோா் கருணை இல்லம் கட்டுவதற்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பூமிபூஜையில் கலந்துகொண்டு அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அடிக்கல் நாட்டனாா்.

தீபம் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளையின் நிறுவனா் தீபம் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சேவாத்திரிகள் முத்துகுமாா், கந்தசாமி, பாரதி ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்துகொண்டு ஆதரவற்றோா் கருணை இல்லம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினாா். தொடா்ந்து, ஆதரவற்றோருக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பீட்டில் அரிசி, வேட்டி - சேலை, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட தொகுப்பை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், மேல்மலையனூா் கிழக்கு ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், தேவதானம்பேட்டை சன்மாா்க்க சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திமுக சாா்பில் கண் சிகிச்சை முகாம்: மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, செஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமையும் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தொடங்கிவைத்தாா்.

இதில், புதுச்சேரி மணக்குள விநாயகா் கண் மருத்துவமனை மருத்துவா்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனா். நிகழ்ச்சியில் செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொத்தியாா் மஸ்தான், செஞ்சி நகர திமுக செயலா் எம்.காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT