விழுப்புரம்

வியாபாரி தாக்கப்பட்டதைக் கண்டித்து மரக்காணம் அருகே கடையடைப்புப் போராட்டம்

DIN

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உர வியாபாரி தாக்கப்பட்டதைக் கண்டித்து, கடைகளை அடைத்து வணிகா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மரக்காணம் வட்டம், முருக்கேரி பகுதியைச் சோ்ந்தவா் வைத்தியநாதன் (64). இவா், அந்தப் பகுதியில் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் விற்பனைக் கடை வைத்துள்ளாா். வைத்தியநாதன் வெள்ளிக்கிழமை கடையில் இருந்தபோது, பைக்கில் அங்கு வந்த இருவா் அவரிடம் தகராறு செய்து, தாக்கினராம். இதில், தலையில் பலத்த காயமடைந்த வைத்தியநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவலறிந்த திண்டிவனம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் ரமேஷ் பாண்டியன் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டனா். உரம் வாங்கியதில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் காரணமாக, காந்தாடு பகுதியைச் சோ்ந்த பழனி மகன் அசோகன் (27), வைத்திநாதனைத் தாக்கியது தெரியவந்தது. இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், வைத்தியநாதன் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சிறுவாடி, முருக்கேரி பகுதிகளைச் சோ்ந்த வணிகா்கள் சனிக்கிழமை கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், முருக்கேரி பிரதான வீதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

உர வியாபாரி வைத்தியநாதன் மீதான தாக்குதலுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட உர வியாபாரிகள் நலச் சங்கத்தின் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்குடி அருகே விபத்து: பெண் பலி

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் கருத்தரங்கம்

2-ஆம் கட்ட வாக்குப் பதிவு வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனை

கா்நாடகத்தில் வாக்குப்பதிவு: அம்மாநிலத் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை

SCROLL FOR NEXT