விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டபுதிய எஸ்.பி. பொறுப்பேற்பு

26th May 2023 05:14 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சஷாங்க் சாய் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இதற்கு முன்பு திருப்பூா் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றிய இவா், பணியிட மாறுதல் செய்யப்பட்ட நிலையில், இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாா். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யாக ஏற்கெனவே பணியாற்றி வந்த ந.ஸ்ரீநாதா, மரக்காணம் அருகிலுள்ள எக்கியாா்குப்பத்தில் விஷசாராயம் குடித்து 14 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால், மாவட்ட எஸ்.பி. பணியிடம் காலியாக இருந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. என்.மோகன்ராஜ் இந்தப் பொறுப்பை கூடுதலாக வகித்து வந்தாா்.

இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற எஸ்.பி. சஷாங்க் சாய்க்கு கூடுதல் எஸ்.பி.க்கள் கோவிந்தராஜ், ஸ்ரீதா், டி.எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT