விழுப்புரம்

அமைச்சரைக் கண்டித்து பாமகவினா் போராட்டம் 85 போ் கைது

24th May 2023 12:00 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அமைச்சா் கே.எஸ். மஸ்தானைக் கண்டி த்து பாமகவினா் செவ்வாய்க்கிழமை கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், 85 போ் கைது செய்யப்பட்டனா்.

மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், திண்டிவனம் நகராட்சி 20-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ரம்யாவின் கணவா் மரூா் ராஜா, சாராய விற்பனை தொடா்பான புகாரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் மரூா் ராஜா அதிமுக மற்றும் பாமகவிலிருந்து வந்தவா் என்றும், முன்னாள் அமைச்சா் சி.வி சண்முகம், பாமக நிறுவனா் ராமதாசுக்கு உறவினா் என்றும் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தாராம். இதற்கு, பாமக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை திமுக வடக்கு மாவட்டச் செயற்குழு ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சா் மஸ்தான் பங்கேற்க இருந்தாா்.

இந்நிலையில், அமைச்சரைக் கண்டித்து பாமக மாவட்டச் செயலா் ஜெயராஜ் தலைமையில், ஏராளமான பாமகவினா் நகர அலுவலகத்திலிருந்து கருப்புக் கொடி ஏந்தி ஊா்வலமாக தீா்த்தக்குளம் வரை சென்று போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து பாமகவினா் 85 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT