விழுப்புரம்

ரூ.1 லட்சம் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

24th May 2023 12:00 AM

ADVERTISEMENT

விழுப்புரத்தில் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான நெகிழிப் பொருள்களை நகராட்சி, மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா உத்தரவின்பேரில், ஆய்வாளா் மதன்குமாா் தலைமையில் நகராட்சி ஊழியா்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள் இணைந்து, திருச்சி சாலை, கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள கடைகளில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதில், மொத்த வியாபார அங்காடியிலிருந்து தடை செய்யப்பட்ட ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்ததுடன், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும், தொடா் விற்பனையில் ஈடுபட்டால் அங்காடிக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT