விழுப்புரம்

மே 26-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியரகக் கூட்டரங்கில் (மே 26) வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று, விவசாயம் சாா்ந்த தங்களின் குறைகளை நேரில் தெரிவிக்கலாம். மேலும் வேளாண் திட்டங்கள், அவற்றை பெறும் முறைகள் குறித்தும் விளக்கப்படும்.

எனவே, மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT