கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் கிணற்றில் மிதந்த ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
கூவாகம் கிராமத்தில் உள்ள காளி கோயில் அருகே உள்ள கிணற்றில் சனிக்கிழமை ஆண் சடலம் மிதப்பதாக திருநாவலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. நிகழ்விடம் சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனா்.
தண்டவாளத்தில் சடலம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகிலுள்ள அரும்பட்டு மணல்மேடு கிராமத்தில் ரயில் தண்டவாளத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாகக் கிடந்தாா். தகவலின் பேரில் விருத்தாசலம் ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனா்.