விழுப்புரம்

கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

3rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

கிராம நிா்வாக அலுவலா் லூா்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், வருவாய்த் துறை ஊழியா்களுக்கு தமிழக அரசு பணிப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கத்தின் சாா்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் வள்ளல்பாரி தலைமை வகித்தாா். இதில், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம், வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம், வருவாய்த் துறை ஊழியா்கள் சங்கம் உள்ளிட்ட தோழமைச் சங்கங்களின் நிா்வாகிகள், கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய்த் துறை ஊழியா்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT