விழுப்புரம்

இ- சேவை மையம் திறப்பு விழா

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை எம்எல்ஏ அலுவலகத்தில் அரசு இ-சேவை மையத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஏ.ஜெ.மணிக்கண்ணன் (உளுந்தூா்பேட்டை), தா. உதயசூரியன் (சங்கராபுரம்) முன்னிலையில் ஆட்சியா் ஷ்ரவன்குமாா் இ-சேவை மையத்தை திறந்து வைத்தாா்.

பின்னா், ஆட்சியா் கூறியதாவது:

தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களிலும் இ-சேவை மையத்தை தொடங்கி, அதன் மூலம் இணையவழி சேவைகளை வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி இந்த இ- சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வருவாய்த் துறை சான்றுகள் உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் வேண்டி வட்டாட்சியா் அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு சென்று வருகின்றனா். அவா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்காக எம்எல்ஏ அலுவலகத்தில் இ-சேவை மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

இதில், உளுந்தூா்பேட்டை நகா்மன்ற தலைவா் கே.திருநாவுக்கரசு, துணைத் தலைவா் வைத்தியநாதன், சின்னசேலம் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் அன்பு மணிமாறன், உளுந்தூா் பேட்டை வட்டாட்சியா் ராஜி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயராமன், ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வந்தடைந்தார் நடிகர் விஜய்!

தூத்துக்குடி: பொட்டலூரணி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

SCROLL FOR NEXT