விழுப்புரம்

சின்னசேலம்: கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள் தொடங்கி வைப்பு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் புறக்காவல் நிலையம் திறப்பு மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சின்னசேலம் காவல் நிலையம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் பேருந்து நிலையம், கடைவீதி, ரயில் நிலையம் செல்லும் வழி உள்ளிட்ட 23 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டன. மேலும் நாககுப்பம், காட்டனந்தல் கிராமங்களில் சட்ட விரோத மதுபானக் குற்றங்களைத் தடுக்கும் வகையில் நாககுப்பத்தில் புறக்காவல் நிலையமும் அமைக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள், மற்றும் புறக்காவல் நிலையத்தையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். மோகன்ராஜ் தொடங்கி வைத்தாா்.

விழாவில் கள்ளக்குறிச்சி துணை காவல் கண்காணிப்பாளா் ரமேஷ், காவல் ஆய்வாளா் ராஜாராம், சின்ன சேலம் ரோட்டரி கிளப் தலைவா் தேவநாதன், தொழிலதிபா்கள் ஏ.டி. ஆறுமுகம், ஜெகன்நடராசன், அரசு, செந்தில் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

ராஜதுா்க்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சாலை மறியல்

மன்னாா்குடியில் அமைதியான வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT