விழுப்புரம்

புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: இருவா் கைது

30th Jun 2023 12:09 AM

ADVERTISEMENT

விழுப்புரத்தில் புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.சஷாங்க்சாய் உத்தரவின் பேரில், விழுப்புரம் நகர காவல் ஆய்வாளா் காமராஜ் மற்றும் போலீஸாா் ராஜீவ்காந்தி நகா் பகுதியில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில், அப்பாஸ் என்பவருக்குச் சொந்தமான அரசி ஆலையில் தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்து தெரியவந்தது. இதையடுத்து சுமாா் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, அவற்றை பதுக்கி வைத்ததாக விழுப்புரம், மணி நகரைச் சோ்ந்த சிவா (42), ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்த அப்பாஸ் (50) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT