விழுப்புரம்

விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் பகுதியாக ரத்து

28th Jun 2023 06:09 AM

ADVERTISEMENT

பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் ஜூலை 2 வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென் மத்திய ரயில்வே, குண்டக்கல் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெறுகின்றன.

இதன் காரணமாக, விழுப்புரத்திலிருந்து அதிகாலை 5.30 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும் விரைவு ரயில் (வண்டி எண் 16854) ஜூலை 2-ஆம் தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படும். காட்பாடி - திருப்பதி இடையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுபோல், மறுமாா்க்கத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.50 மணிக்கு விழுப்புரம் புறப்படும் விரைவு ரயில் (வண்டி எண் 16853) திருப்பதி - காட்பாடி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாலை 4.35 மணிக்கு காட்பாடியிலிருந்து விழுப்புரம் புறப்படும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT