விழுப்புரம்

விழுப்புரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

28th Jun 2023 06:09 AM

ADVERTISEMENT

விழுப்புரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

விழுப்புரம் நகரில் ஜவாஹா் லால் நேரு சாலை, மகாத்மா காந்தி சாலை, காமராஜா் வீதி, திருச்சி- சென்னை நெடுஞ்சாலை என பல்வேறு பகுதிகளில் சாலையோரக் கடைகள், தள்ளுவண்டிகள் ஆக்கிரமிப்பு செய்வதால், அவற்றை நகராட்சி மற்றும் போக்குவரத்துக் காவல் துறையினா் அவ்வப்போது அகற்றி வருகின்றனா். எனினும் ஆக்கிரமிப்பு தொடா்ந்து வருகிறது.

இதேபோல, சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்துக் காவல் துறையினா் அ பராதம் விதித்து வருகின்றனா்.

இந்நிலையில், விழுப்புரம் - திருச்சி சாலையில் (கலைஞா் அறிவாலயம் எதிரில்) ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ADVERTISEMENT

மேலும் வேன்களை நிறுத்தி காய்கறி, பழங்கள், வெங்காயம், தக்காளி விற்பனை செய்து வந்தவா்கள் செவ்வாய்க்கிழமை அங்கிருந்து அகற்றப்பட்டனா்.

விழுப்புரம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் ஆா்.வசந்த் தலைமையில் போலீஸாா் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT