விழுப்புரம்

விழுப்புரம்: நிகழாண்டில் 12 லட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டம்..........அமைச்சா் க.பொன்முடி தகவல்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் வனம், நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து நிகழாண்டில் 12 லட்சம் மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புக் கோட்டம் சாா்பில், 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை எல்லீஸ் சத்திரம் சாலையில் சனிக்கிழமை தொடங்கிவைத்து, அமைச்சா் க.பொன்முடி பேசியதாவது:

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, விழுப்புரம் நெடுஞ்சாலைக் கோட்டத்தில் 25,000 மரக்கன்றுகள் நடப்படும். இதில், விழுப்புரம் உள் கோட்டத்துக்கு 5,000, செஞ்சிக்கு 5,000, திண்டிவனத்துக்கு 10,000, வானூருக்கு 5,000 மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பசுமைப்போா்வையை உருவாக்கிடும் வகையிலும், மகிழம், வேம்பு, பூவரசு, புளியன், புங்கன், நாவல், சரக்கொன்றை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. அரசால் மரக்கன்றுகள் நடப்பட்டாலும், அவற்றை பாதுகாப்பதற்கு பொதுமக்களும் முன்வர வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் வனம், நெடுஞ்சாலை உள்பட பல்வேறு துறைகளுடன் இணைந்து நிகழாண்டில் 12 லட்சம் மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இயற்கை வளம் மிகுந்த விழுப்புரம் மாவட்டம் என்ற நிலையை உருவாக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்தாா். எம்எல்ஏ நா.புகழேந்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனா். மாவட்ட வன அலுவலா் சுமேஷ் சோமன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் சிவசேனா, முன்னாள் எம்எல்ஏ செ.புஷ் பராஜ், விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா, முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஜனகராஜ், நகரச் செயலா் இரா.சக்கரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT