விழுப்புரம்

தேசிய மக்கள் நீதிமன்றத்தில்ரூ.4.86 கோடிக்குத் தீா்வு

11th Jun 2023 12:47 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.4.86 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், அதன் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஆா்.பூா்ணிமா தலைமையில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மட்டுமன்றி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி, உளுந்தூா்பேட்டை, செஞ்சி, சங்கராபுரம், திருக்கோவிலூா், வானூா், விக்கிரவாண்டி ஆகிய நீதிமன்றங்களிலும் 16 அம ா்வுகளாக நீதிபதிகள் வழக்குகளை சமரசமாக விசாரணை செய்தனா்.

ADVERTISEMENT

இதில், விபத்து, காசோலை, குடும்ப நலன், ஜீவனாம்சம், தொழிலாளா் பிரச்னை, மின் பயன்பாடு, வீட்டு வரி மற்றும் இதர பொதுப் பயன்பாடு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தீா்வு காணப்பட்டன.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் 250-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 147-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சுமாா் ரூ.4,86,36,947-க்கு தீா்வு காணப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT