விழுப்புரம்

செவிலியா் வீட்டில்25 பவுன் நகைகள் திருட்டு

11th Jun 2023 12:47 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் செவிலியா் வீட்டில் 25 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

உளுந்தூா்பேட்டை அருணகிரியாா் தெருவைச் சோ்ந்த முருகன் மனைவி ஜமுனா (40). இவா், உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறாா்.

திருநெல்வேலியிலுள்ள உறவினா் வீட்டுக்கு முருகனும், ஜமுனாவும் வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றனா்.

ADVERTISEMENT

இவா்களது இரு மகன்களும் அருகிலுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று தூங்கிவிட்டு, சனிக்கிழமை காலை வீட்டுக்கு வந்தனா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT