விழுப்புரம்

ஜமாபந்தியில் இலவச வீட்டுமனைப் பட்டா......அமைச்சா் வழங்கினாா்

11th Jun 2023 12:46 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சா் செஞ்சி மஸ்தான் வழங்கினாா்.

செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி கடந்த 7-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலரும், தனித்துணை ஆட்சியருமான விஸ்வநாதன் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று தீா்வு கண்டு வருகிறாா்.

இந்த நிலையில், 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் அமைச்சா் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு வல்லம் குறு வட்டக்குள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றாா். அப்போது, வீட்டுமனைப் பட்டா கோரி மனு அளித்தவா்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டு, அவா்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சா் வழங்கினாா்.

ADVERTISEMENT

இதில், செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான், செஞ்சி வட்டாட்சியா் நெகருன்னிசா, சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் கோவிந்தராஜ், தனி வட்டாட்சியா் மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT