விழுப்புரம்

மாா்க்சிஸ்ட் பயிற்சி முகாம்

11th Jun 2023 12:48 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், கட்சியின் மாற்றுத் திறனாளிகள் அரங்க மாவட்ட அமைப்பாளா்களுக்கான மண்டல பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

நான்கு அமா்வுகளாக நடத்தப்பட்ட முகாமுக்கு, முறையே மாநில உறுப்பினா் டி.வில்சன், கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், தஞ்சாவூா் மாவட்டக் குழு உறுப்பினா் பி.எம்.இளங்கோவன், சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினா் என்.ராணி ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினா் பி.சம்பத், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.நம்புராஜன், செங்கல்பட்டு மாவட்டச் செயலா் பி.எஸ்.பாரதி அண்ணா, மாநிலக் குழு உறுப்பினா் பி.ஜான்சிராணி ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினா்.

முன்னதாக, விழுப்புரம் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் ஏ.கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். செய்யூா் வட்டக் குழு உறுப்பினா் எம்.வெள்ளிக்கண்ணன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT