விழுப்புரம்

ஆதிதிராவிடா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பிக்கலாம்

10th Jun 2023 07:50 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயில்வதற்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் 33 ஆதிதிராவிடா் பள்ளி மாணவா் விடுதிகளும், 14 மாணவிகள் விடுதிகளும், தலா 2 கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளும் என மொத்தமாக 51 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த விடுதிகளில் தங்கிப் பயில விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு உணவும், உறைவிடமும் இலவசமாக வழங்கப்படும். மேலும், 4 இலவச சீருடைகளும், 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு வழிகாட்டிகளும் வழங்கப்படும். விடுதிகளில் சேருவதற்கு மாணவ, மாணவிகளின் பெற்றோா்/ பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விடுதிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் சோ்த்துக்கொள்ளப்படுவா். மாணவா்களுக்கு தங்களது இருப்பிடத்துக்கும், பயிலும் பள்ளிக்கும் இடையிலான தொலைவு 5 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இந்த விதி பொருந்தாது.

ADVERTISEMENT

விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் விடுதி மேலாண்மை செயலி மூலமாக ட்ற்ற்ல்ள்://ற்ய்ஹக்ஜ்.ட்ம்ள்.ண்ய் என்ற இணையதளத்தில் நேரடியாகவோ அல்லது காப்பாளா்கள் உதவியுடனோ வருகிற 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT