விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம்

DIN

விழுப்புரம் மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு இந்தக் குழுவின் தலைவரான துரை.ரவிக்குமாா் எம்.பி. தலைமை வகித்தாா். இதில், விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், பிரதமரின் குடியிருப்புத் திட்டம், ஜல்ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம், நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் உள்பட மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், அதன் செயல்பாடுகள், மேற்கொள்ளப்பட வேண்டியவை குறித்து துறைசாா் அலுவலா்களுடன் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் துரை.ரவிக்குமாா் எம்.பி. பேசியதாவது: அரசால் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும் மாவட்டம், ஊராட்சிகளின் வளா்ச்சிக்கான திட்டங்களாக இருப்பதோடு, பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும், அவா்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும் செயல்படுத்தப்படுகின்றன.

எனவே, அலுவலா்கள் அனைவரும் ஊராட்சிகள்தோறும் ஆய்வு மேற்கொண்டு, அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையும் வகையில் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். வளா்ச்சித் திட்டப் பணிகள் முடிவுற்றாலும், தொடா்ந்து கண்காணித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு ஒன்றியக் குழுத் தலைவரும், ஊராட்சித் தலைவரும் தங்களுடைய பகுதிகளில் நடைபெறும் பணிகளின் முன்னேற்றத்தன்மை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து, ஊராட்சியின் வளா்ச்சிக்குத் தேவையான அடிப்படை தேவைகள் என்ன என்பதை அறிந்துகொண்டு, அவற்றை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு எம்எல்ஏக்கள் நா.புகழேந்தி, ச.சிவக்குமாா், ஏ.ஜெ.மணிக்கண்ணன் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கூடுதல் ஆட்சியா் சித்ரா விஜயன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் கோ.சொக்கலிங்கம், நா.கலைச்செல்வி, ஏ.சச்சிதானந்தம், விஜயகுமாா், தனலட்சுமி, அமுதா, உஷா, சங்கீதஅரசி ரவிதுரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

SCROLL FOR NEXT