விழுப்புரம்

மாணவா்கள் தொழில்முனைவோராக மாற வேண்டும் அமைச்சா் செஞ்சி மஸ்தான் அறிவுறுத்தல்

DIN

தொழில்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவா்கள் ஒவ்வொருவரும் சிறந்த தொழில்முனைவோராக மாறுவதற்காக திறனை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்று மாநில சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அறிவுறுத்தினாா்.

திண்டிவனம் அரசு தொழில்பயிற்சி நிலையம் உள்பட தமிழகத்தில் உள்ள 22 அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்கள்’ அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, திண்டிவனம் அரசு தொழில்பயிற்சி நிலையத்தில், ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் 982.25 சதுர மீட்டா் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தில் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி ஆகியோா் குத்துவிளக்கேற்றி மாணவா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.

இந்த விழாவில் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பேசியதாவது: கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை தனது இரு கண்களாக கருதும் தமிழக முதல்வா், கல்வி வளா்ச்சிக்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறாா்.

தொழில்கல்வி பயிலும் மாணவா்கள் சுயமாக தொழில் தொடங்கி தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்ற உயா்ந்த நோக்கில், நகா்ப்புறங்களில் அரசுத் தொழில் பயிற்சி நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

திண்டிவனம் அரசு தொழில்பயிற்சி மையத்தில் திறக்கப்பட்டுள்ள 4.0 தொழில்நுட்ப மையத்துக்கான மாணவா்கள் சோ்க்கை விரைவில் நடைபெறவுள்ளது. இந்த அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவா்கள் இந்தத் திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு தொழில்திறனை வளா்த்துக்கொண்டு, சிறந்த தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் திண்டிவனம் சாா் - ஆட்சியா் கட்டா ரவி தேஜா, மரக்காணம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் தயாளன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் ஷீலாதேவி சேரன், மரக்காணம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் பழனி, திண்டிவனம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தின் முதல்வா் பிரேம்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

SCROLL FOR NEXT