விழுப்புரம்

செஞ்சி அரசுப் பள்ளியில் கழிப்பறை கட்ட பூமிபூஜை

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ‘நம்ம ஊரு நம்ம பள்ளி’ திட்டத்தின் கீழ், ரூ.8.84 லட்சம் மதிப்பீட்டில் நவீன கழிப்பறை கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திண்டிவனம் கல்வி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமை வகித்தாா். பேரூராட்சி மன்ற உறுப்பினா் சுமித்ரா சங்கா் முன்னிலை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியா் செந்தில்குமாா் வரவேற்றாா்.

செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான் ஆகியோா் பூமிபூஜை பணிகளை தொடங்கிவைத்தனா். பொறியாளா் அருள்மொழிதேவன், ஆசிரியா்கள் தேவதாஸ், கிரிஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT