விழுப்புரம்

போக்ஸோவில் இளைஞா் கைது

8th Jun 2023 01:12 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், வானூா்அருகே சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

வானூா் வட்டம், சேமங்கலம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் இ.அப்பு (எ) அலெக்ஸாண்டா்(21). இவா் புதுவை மாநிலத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமியிடம் நட்பாகப் பழகி 2021 ஆகஸ்ட் மாதம் முதல் தகாத முறையில் நடந்து கொண்டாராம். இது குறித்து, சிறுமியின் தாயாா் கோட்டக்குப்பம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதையடுத்து அப்பு(எ) அலெக்ஸாண்டா் மீது கோட்டக்குப்பம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து செவ்வாய்க்கிழமை அவரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT