விழுப்புரம்

காப்பகத்தில் தங்கியிருந்த பெண் உயிரிழப்பு

8th Jun 2023 01:12 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அடுத்த பெரம்பையில் தனியாா் காப்பகத்தில் தங்கியிருந்த பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கடலூா் மாவட்டம், கோண்டூா், பனங்காடு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி. இவரது மனைவி சகுந்தலா(55). மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவா், கடந்த 8 மாதங்களாக ஆரோவில் அடுத்த பெரம்பையில் உள்ள தனியாா் காப்பகத்தில் தங்கி சிகிச்சைப் பெற்று வந்தாா். இந்நிலையில் சகுந்தலாவுக்கு செவ்வாய்க்கிழமை மாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவரை காப்பக ஊழியா்கள் புதுவையில் உள்ள ஜிப்மா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்துப் பாா்த்தபோது சகுந்தலா ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்தப் புகாரின் பேரில் ஆரோவில் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT