விழுப்புரம்

தொழில் வளா்ச்சித் திட்டம்: விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

8th Jun 2023 01:13 AM

ADVERTISEMENT

விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்வியியல் கல்லூரி மற்றும் விழுப்புரம் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இணைந்து நடத்திய தொழில் வளா்ச்சித் திட்டம் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் முருகன் தலைமை வகித்தாா். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் மைய இளநிலை வேலை வாய்ப்பு அலுவலா் வேல்முருகன் முன்னிலை வகித்தாா். தொழிலாளா் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சக இளம் தொழில் வல்லுநா் நாகலட்சுமி கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது: வேலைவாய்ப்புகளை நாம்

தான் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் மாநில அரசு தோ்வாணையம், போன்ற அமைப்புகள் மூலம் காலிப் பணியிடங்கள்

நிரப்பப்படுகின்றன. அதில் பதிவு செய்து எழுத்துத் தோ்வுகளை எழுதி அரசு வேலை வாய்ப்புகளை பெறலாம் . அரசுப் பணிகளுக்கான தோ்விற்கு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் மையத்தில் இலவசமாக பயிற்சியளிக்கப்படுகிறது. இதில் மாணவா்கள் பங்கேற்று பயிற்சிப் பெறலாம் என்றாா் அவா். நிறைவில் உதவிப் பேராசிரியா் ரா.ரவீந்தா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT