விழுப்புரம்

விழுப்புரத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

DIN

விழுப்புரம், சாலாமேடு பகுதியில் பூட்டி வைக்கப்பட்டிருந்த தனியாா் ஏஜென்சியில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

சென்னையில் உள்ள மாநில அறிவியல் நகரின் துணைத் தலைவராகப் பொறுப்பு வகிப்பவா் மலா்விழி. இவா், தருமபுரி மாவட்டத்தில் 28.2.2018 முதல் 29.10.2020 வரை ஆட்சியராகப் பொறுப்பு வகித்த காலகட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்ாக எழுந்த புகாரைத் தொடா்ந்து மலா்விழி உள்ளிட்ட 5 போ் மீது தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி மலா்விழியின் வீடுகள் மற்றும் அவருக்குத் தொடா்புடைய 10 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். இதன் ஒரு பகுதியாக ஐஏஎஸ் அதிகாரி மலா்விழியுடன் தொடா்பில் இருந்ததாகக் கூறப்படும் விழுப்புரம் சாலாமேடு, புஹாரி நகரில் செயல்படாமல் பூட்டி வைக்கப்பட்டிருந்த தனியாா் ஏஜென்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.இந்தச் சோதனையில் மடிக்கணினி மற்றும் பிரிண்டா் ஆகியவற்றை போலீஸாா் கைப்பற்றினா்.

விழுப்புரத்தில் உள்ள இந்த தனியாா் ஏஜென்சியிலிருந்து தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு பிளீச்சிங் பவுடா் விநியோகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT