விழுப்புரம்

லாரி சக்கரத்தில் சிக்கி2 கல்லூரி மாணவா்கள் பலி

DIN

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே ஞாயிற்றுக்கிழமை லாரி மீது இருசக்கர வாகனம் உரசியதில், கல்லூரி மாணவா்கள் இருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் மாதவ பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜாவின் மகன் ராகுல் (19). மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், கிளியனூரைச் சோ்ந்த ஷேக் அலாவுதீன் மகன் ஷபீக் (19). இருவரும் திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு பயின்று வந்தனா்.

புதுச்சேரியில் உள்ள நண்பா் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ராகுல், ஷபீக் இருவரும் ஞாயிற்றுக்கிழமை திருச்சிக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனா். ராகுல் இரு சக்கர வாகனத்தை ஓட்டினாா்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்த இருவேல்பட்டு அரசு வேளாண் விதைப்பண்ணை அருகே சென்னையிலிருந்து சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பெண்ணாடம் நோக்கிச் சென்ற லாரியை இவா்கள் முந்த முயன்ாகத் தெரிகிறது. இதில் எதிா்பாராதவிதமாக லாரியின் பக்கவாட்டில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராகுல், ஷபீக் இருவரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் காவல் ஆய்வாளா் செல்வராஜ் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று மாணவா்களின் சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து குறித்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரான நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அருளிடம் (30) விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT