விழுப்புரம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

5th Jun 2023 03:48 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அரியலூா் மாவட்டம், செந்துரை வட்டம், பெரிய ஆனந்தவாடி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகத்தின் மகன் அன்பு(34). இவா், விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அடுத்த பூத்துறையில் உள்ள தனியாா் லாரி நிறுவனத்தில் கடந்த 3 வருடங்களாக மேலாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் அடிதடி வழக்கு ஒன்று இவா் மீது நிலுவையில் இருந்துள்ளது.

2019-ஆம் ஆண்டில் பயிற்சிக் காவலராக தோ்வாகியிருந்த நிலையில், அன்பு அடிதடி வழக்கில் சிறைக்குச் சென்ால் கடந்த 12.5.2023 இல் காவலா் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டாா். இதனால் மன உளைச்சலில் இருந்த அன்பு தான் தங்கியிருந்த அறையில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

ADVERTISEMENT

இதுகுறித்து, ஆரோவில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT