விழுப்புரம்

அரசுக்கு தெரிந்தே போலி மதுபானங்கள் விற்பனைசி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

5th Jun 2023 03:47 AM

ADVERTISEMENT

 

தமிழக அரசுக்குத் தெரிந்தே டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானங்கள் விற்கப்படுகின்றன என்று மாநிலங்களவை அதிமுக உறுப்பினா் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினாா்.

விழுப்புரத்தில் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சியில் கள்ளச்சாராய விற்பனை பெருகிவிட்டது. இதுகுறித்து எச்சரித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

ADVERTISEMENT

டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானங்கள் விற்கப்பட்டு வருவதால் அவற்றை வாங்கிக் குடிப்பவா்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானங்கள் விற்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம். கோயில்கள் அனைவருக்கும் பொதுவானது. இதில் யாரும் உரிமை கொண்டாட முடியாது. கோயில்களில் அனைத்து சமுதாயத்தினரும் வழிபட வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்துவது தொடா்பாக இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்டுள்ள பிரச்னையில் சுமுகத் தீா்வு காண அமைச்சா் க.பொன்முடி நடவடிக்கை எடுக்கவில்லை.

கனியாமூா் தனியாா் பள்ளி சூறையாடப்பட்ட சம்பவத்தில், அப்பாவி இளைஞா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் இதுவரை திரும்பப் பெறப்படவில்லை.

வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றவாளிகளும் கண்டறியப்படவில்லை. நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானங்கள் விற்கப்பட்டு, அரசுப் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது என்றாா் சி.வி.சண்முகம்.

பேட்டியின்போது, கட்சியின் நகரச் செயலா்கள் இரா.பசுபதி, சி.கே.ராமதாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT