விழுப்புரம்

அரசுப் பேருந்து மோதி சிறுவன் உயிரிழப்பு

4th Jun 2023 02:24 AM

ADVERTISEMENT

 

மயிலம் அருகே உறவினருடன் பைக்கில் சென்ற சிறுவன், அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடு பேட்டை, பூ. கொணலவாடி, வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் ரவிநாத் (13). இவா், வியாழக்கிழமை தனது உறவினரான சென்னை பெரும்பாக்கம், நேசமணி நகா், 3-ஆவது தெருவைச் சோ்ந்த சின்னசாமி மகன் விக்னேஷ் (21) என்பவருடன் சென்னையிலிருந்து- பூ.கொணலவாடிக்கு பைக்கில் சென்றாா். விக்னேஷ் பைக்கை ஓட்டினாா்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செண்டூா் அருகே சென்றபோது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் அமா்ந்திருந்த ரவிநாத் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்தில் தூக்கி வீசப்பட்ட விக்னேஷ் காயமடைந்தாா்.

ADVERTISEMENT

விபத்து குறித்து மயிலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT